“அழகான ஜோடி’.. சூர்யா – ஜோதிகாவை புகழ்ந்த பிரித்விராஜ்.!”

0
23

“சூர்யா – ஜோதிகாவுடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகர் பிரித்விராஜ்.  திரையுலகில் பல நண்பர்களைக் கொண்ட நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், சமீபத்தில் அவரது மனைவி சுப்ரியா மேனனுடன் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவை சந்தித்திருக்கிறார். அந்தப் படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட பிரித்விராஜ், அவர்களை ஊக்குவிக்கும் நண்பர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். ஜோதிகா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் இணைந்து நடித்த மொழி, ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது.

பாலிவுட் படமான செல்ஃபி படம் குறித்து மகிழ்ச்சியில் உள்ள பிரித்விராஜ், மற்ற படங்களிலும் பிஸியாக இருக்கிறார், அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இதற்கிடையே சூர்யா – ஜோதிகாவை சந்தித்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதற்கு, “அழகான மாலை, நீங்கள் இருவரும் எவ்வளவு அழகான ஜோடி.! மேலும் பல நினைவுகளை உருவாக்குவோம்” என சூர்யா பதிலளித்திருந்தார்.”

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்