Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுசட்டவிரோதமாக நபர்களை சிறையில் அடைக்க இது சர்வாதிகார நாடல்ல- சஜித்

சட்டவிரோதமாக நபர்களை சிறையில் அடைக்க இது சர்வாதிகார நாடல்ல- சஜித்

yaraglobal

நாட்டின் வரிச்சுமை அதிகரித்து,மின் கட்டணமும் அதிகரித்து,மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் இந்நாட்டில் துன்பப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனையளிக்கிறது எனவும்,
சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆனந்த பாலித மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோருக்கு இந்நாட்டின் நீதித்துறை ஊடாக நீதி கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும்,எரிசக்தி துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், தற்போதைய அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகவும் அவர்கள் முன்நின்று குரல் எழுப்பினர் எனவும்,அவர்கள் எந்த வன்முறை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும்,அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமையை அவர்கள் பயன்படுத்தியதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்களை சட்டவிரோதமாக சிறையில் அடைக்க நம் நாடு ஒரு சர்வாதிகார அல்லது ஏதோச்சதிகார நாடல்ல எனவும்,இது ஓர் ஜனநாயக நாடு எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே,இவ்விருவரினது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க,ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் எனவும்,அவர்களின் விடுதலைக்காக சாத்தியமான அனைத்து அமைதியான,ஜனநாயக மற்றும் சட்ட ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தான் முன்நிலை வகிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித ஆகியோரை பார்வையிடும் முகமாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(25) வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்