பாலிவுட் சூப்பர் வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை வந்துள்ளார்.
தனது முகநூல் கணக்கின் நேரடிச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மிகவும் அழகானது எனவும் அனைவரையும் இங்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் தான் இலங்கைக்கு வந்ததாகவும், இது இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
