கொடுக்கல் வாங்கல் பிரச்சனை: இ. போ. ச பஸ் சாரதி நடத்துனரால் கொலை

29

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றை டிப்போவுக்குள் நிறுத்தி வைத்ததன் பின்னர் அதன் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அவர் ஓட்டிச்சென்ற பஸ்ஸின் நடத்துனரே இவ்வாறு சாரதியை தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினை வெளியிட்டார்.

பஸ் சாரதி மற்றும் நடத்துனர் இடையே பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், இதன் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

Join Our WhatsApp Group