வாட்ஸ்அப் (WhatsApp) செயலி அறிமுகமான காலத்திலிருந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கான முக்கிய காரணம், அதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் தான்.
மெசேஜ்கள் அனுப்புவது மட்டுமின்றி, டைப் (Type) பண்ண முடியாத சமயங்களில் வாய்ஸ் நோட் (Voice Note) அனுப்புதல், இன்டர்நெட் (Internet) பயன்படுத்தி வாய்ஸ் கால் (Voice Call), வீடியோ கால் (Video Call) போன்ற அம்சங்கள் அனைத்தும் ஒரே செயலியில் இருப்பது தான் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்ஜை ரீட் (Read) செய்தால் கூட சிக்கலா?
வாட்ஸ்அப்பின் அம்சங்களை பின்பற்றி, இப்போது பல செயலிகள் சந்தைக்கு வந்தாலும், இன்னும் வாட்ஸ்அப் தான் மக்களை ஆட்சி செய்து வருகிறது. இதில் இருக்கும் கவனிக்க வேண்டிய அம்சம் என்றால், அது நாம் அனுப்பும் செய்தியை எதிர் முனையில் இருக்கும் நபர் பார்த்துவிட்டாரா? இல்லையா? என்பதனை உறுதி செய்யும் ப்ளூ டிக் (Blue Tick) உடன் வருகிறது.
இந்த ப்ளூ டிக் அம்சம் பல சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், சில சமயங்களில் அதுவே பிரச்சனைக்கு ஆரம்பமாகவும் இருக்கிறது. எதிர்முனையில் இருப்பவர், தான் பெற்ற மெசேஜ்ஜை பார்த்து விட்டார் என்பது அனுப்புநருக்குத் தெரியும் என்பதால், பதில் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்முனையில் இருப்பவர் தள்ளப்படுகிறார்.
ரீரிப்ளை செய்யாவிட்டால் சண்டை வருகிறதா? சங்கட்டமா இருக்கா?
இதன் காரணமாகப் பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மெசேஜ்ஜை பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருப்பதால், தெரிந்தவர்களுடன் மனக்கசப்பும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பலரும் இந்த பிரச்சனையைச் சந்திப்பதை அறிந்த வாட்ஸ் ஆப் நிறுவனம், சமீபத்தில் அதற்கான தீர்வை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் இனி சீக்ரெட் ஆக அவர்களுக்கு வந்த மெசேஜ்ஜை படிக்கலாம்.
மறுமுனையில் இருப்பவருக்கு நீங்கள் மெசேஜ்ஜை ரீட் செய்தீர்களா? இல்லையா? என்பது காண்பிக்கப்படமாட்டாது. இனி தேவைப்பட்டால் ப்ளூ டிக்கை நீங்கள் மறைத்துக் கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் இப்போது வழங்குகிறது.
ரீட் ரெசிப்ட்ஸ் (Read Receipts) என்று கூறப்படும் இந்த ப்ளூ டிக்கை டிஸ்சேபிள் (Disable) செய்வதன் மூலம் நாம் அனுப்பும் செய்தியை மறுமுனையில் இருப்பவர் பார்த்துவிட்டார் என்பதையும், நமக்கு வரும் செய்தியை நாம் பார்த்து விட்டோமா என்பதையும் மறைத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக ஒரு மெசேஜ்ஜை படித்தவுடன் அதற்கு பதில் அனுப்பியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இனி இருக்காது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் செய்ய வேண்டியது.!
முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப் ஆப்ஸை ஓபன் செய்து டிஸ்பிளேவின் வலது ஓரம் இருக்கும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் இருக்கும் செட்டிங்ஸ் (Settings) என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு, அதனுள் ப்ரைவசி (Privacy) என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் இருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் (Read Receipts) என்ற தேர்வு எப்போதுமே ஆன் (On) செய்யப்பட்டு இருக்கும். அதனை ஆஃப் (Off) செய்வதன் மூலம் ப்ளூ டிக்கை டிஸ்சேபிள் செய்யலாம்.
ஐபோன் பயனர்கள் செய்ய வேண்டியது.!
ஐபோன் பயனர்கள் முதலில் உங்கள் ஐபோனில் இருக்கும் வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்ய வேண்டும்.
பிறகு, உங்கள் ஐபோனின் செட்டிங்ஸ் (Settings) உள்ளே செல்ல வேண்டும்.
பிறகு, அதில் இருக்கும் ப்ரைவசி (Privacy) என்ற உள்ளே செல்லுங்கள்.
ஏற்கனவே ஆன் செய்யப்பட்டிருக்கும் ரீட் ரெசிப்ட்ஸ் என்ற தேர்வை ஆப் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப்பில் ப்ளூ டிக் டிஸ்சேபிள் செய்யப்பட்டுவிடலாம்..
இது தனிநபர் சேட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். குரூப்பில் (Group) அனுப்பப்படும் செய்திகளுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.