Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புவிளையாட்டு1 பந்தில் 16 ரன்கள் எப்படி...! ஸ்டீவ் சுமித் சாதனை - (வீடியோ)

1 பந்தில் 16 ரன்கள் எப்படி…! ஸ்டீவ் சுமித் சாதனை – (வீடியோ)

yaraglobal

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் சமீபத்தில் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) தொடர்ச்சியாக சதம் அடித்த இரண்டாவது வீரரானார். சுமித் சனிக்கிழமை சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் இடையேயான போட்டியின் போது மூன்று இலக்கத்தை எட்டினார்.

ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுமித் தனது நல்ல ஆட்டத்தை தொடர்ந்தார், அவர் போட்டியில் அரை சதத்தை அடித்தார். சுமித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 66 ரன்கள் எடுத்து நாதன் எல்லிஸால் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் 1 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

33 வயதான ஜோயல் பாரிஸை நோ-பாலில் சிக்சருக்கு அடித்தார், அவருடைய பெயருக்கு ஏழு ரன்களைப் பெற்றார். பாரிஸ் பின்னர் ஒரு வைட் பந்து வீசினார், அது பைன் லெக் சென்று எல்லையை தொட்டது ஐந்து ரன்கள் கொடுத்தார். பின்னர் சுமித் ஒரு பவுண்டரி அடித்தார், ஆக மொத்தம் ஒரு பந்து வீச்சில் 16 ரன்கள் கிடைத்து உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவை பிக் பாஷ் லீக் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்