அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவினால் அமைச்சரவைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இந்த பிரேரணைக்கு இறுதி அனுமதியைப் பெறுவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவது கட்டாயம் என ஆணைக்குழு வலியுறுத்துகிறது.