Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

yaraglobal

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (18) பிற்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதன்படி இன்று பிற்பகல் நடைபெறவிருந்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், வாத விவாதங்களின் பின்னர், திட்டமிட்டபடி இன்று பிற்பகல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்