பல இலட்சம் ரூபா பெறுமதியான அந்நிய செலாவணி திருடிய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து 06 மில்லியன் திருடிள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காளர் என பொலிஸார் கூறியதாக அட தெரண தெரிவித்துள்ளது. ஹோட்டல் விருந்தினர்களிடமிருந்த வெளிநாட்டு நாணயங்களை இந்தக் குழுவினர் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு பெட்டிகளின் இரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி சந்தேகநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.