பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேயின் “தன்னிச்சையான தடுப்புக்காவலை” இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஏழு மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய மன்றம் (FORUM-ASIA), CIVICUS, பாதுகாப்பு முன்னணி, மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான சர்வதேச செயற்குழு மற்றும் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை இயக்கம் ஆகியவை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ( PTA) கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்,150 நாட்களை கடந்தும் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.