உயிரிழந்த நபர் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சில வாரங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவரென ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. பேலியகொட, கலுபாலம பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 6.30 மணியளவில் பேலியகொட பியகம வீதியில் கலுபாலம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் சம்பவத்தில் உயிரிழந்தவர், சஜித் ரங்கா என்ற 33 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.