பெண் வேடத்தில் மிரட்டும் யோகிபாபு – ‘மிஸ் மேகி’ டைட்டில் டீசர் எப்படி?

13

நடிகர் யோகிபாபு பெண் வேடத்தில் நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் யோகிபாபு நகைச்சுவை நடிகர் கதாபாத்திரங்களிலும், முன்னணி கதாபாத்திரங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

அண்மையில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல தந்தையாக சீரியஸான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் யோகிபாபு நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘மிஸ் மேகி’. லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

டீசர் எப்படி? – 1.35 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த டைட்டில் டீசர் மொத்தமாகவே யோகிபாபுவின் கதாபாத்திர அறிமுகமாக உருவாகியுள்ளது. சிகை அலங்கார பொருட்களுடன் சில வின்டேஜ் பொருட்களும் அணிவகுத்துக் கிடக்கிறது. கேமரா பேனிங் (Panning) ஷாட்டில் நகர, பெண் வேடத்தில் காட்சியளிக்கிறார் நடிகர் யோகிபாபு. வித்தியாசமான அவரது தோற்றம் ஆச்சரியப்படுத்துகிறது.

ஆனாலும், அவருக்கான அந்த சிகை அலங்காரமும், வேடமும் அவ்வளவு கச்சிதமாக பொருந்தவில்லையோ என்ற உணர்வும் எழுகிறது. இருப்பினும் ஈர்க்கும் பின்னணி இசையுடன் வித்தியாசமான யோகிபாபுவின் இந்த முயற்சி அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ். டீசர் வீடியோ:

Join Our WhatsApp Group