தாவூத் இப்ராஹிம் இந்தியாவின் முக்கியமான தலைவர்கள், தொழிலதிபர்களை தாக்க தனியாக ஒரு குழு அமைத்து சதித் திட்டம் தீட்டிவருவதாக வந்த தகவலையடுத்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தான் தாவூத்தின் சகோதரி ஹஸீனா பார்கரின் மகன் அலிஷா பார்க்கரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
அவர் அளித்த தகவலின்படி, தாவூத்துக்கு மொத்தம் 4 சகோதரர்கள், 4 சகோதரிகள் உள்ளனர். அவரையும் சேர்த்து அவர் வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். தாவூத் இப்போது பாகிஸ்தானி பதான் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை 2வது மனைவியாக திருமணம் செய்துள்ளார்.
துபாயில் ஜூலை 2022-ல் தாவூத் அவரது முதல் மனைவி மைசாபினை சந்தித்துளார். துபாயில் சைதூன் ஹமீது அண்டுலேவின் இல்லத்தில் தாவூத் தங்கியுள்ளார். இப்போது கராச்சியில் அப்துல்லா காசி பாபா தர்காவின் பின்னால் உள்ள ஒரு பகுதியில் தாவூத் வசிக்கிறார்.
தாவூத்திற்கு முதல் மனைவி வாயிலாக மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முதல் மகள் பெயர் மாருக் இவர் ஜாவேத் மியாண்டட் மகன் ஜுனைத்தை திருமணம் செய்துள்ளார்.
இரண்டாவது மகள் பெயர் மெஹ்ரின், மூன்றாவது மகள் பெயர் மாஸியா. தாவூத்தின் மகன் பெயர் மோஹின் நவாஸ். தாவூத் அவரது முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இவ்வாறாக குடும்பம் பற்றி அலிஷா பார்க்கர் பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளார்.