தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவானது எனவும் அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு நாளை கூடவுள்ளதுடன், அக்குழு தீர்மானித்தால், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஜனவரி 19ஆம் திகதி காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது