தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான ஆலோசனை குழுவானது தீர்மானித்துள்ளது.
இன்று (17) பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு பணியகத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், மேற்படி சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமான திருத்தங்களை பரிசீலித்ததன் பின்னர் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.
இதன்படி, புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நாளை (18) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.