“வெட்கக்கேடு- சபையில் சஜித் : பொய் கூற வேண்டாம் – பிரதமர்” உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு கட்டுப் பணத்தை ஏற்க வேண்டாம் என்று புது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் ஆணை பிறப்பிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தார். பாராளுமன்றம் இன்று காலை பத்து மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கூடியது.
இதன்போது கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தை சுட்டி காட்டினார். இது அரசாங்க உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்ற தீர்மானமாகவே தெரிய வருகிறது. செயலாளரின் செயல்பாடு, அரசியலமைப்பை முற்றாக மேலும் செயல்பாடு. தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்களின் வெட்கக்கேடான செயல்பாடு என்பதை நான் சபையில் சுட்டிக் காட்டுகிறேன். “வெட்கம்.. வெட்கம்.. வெட்கக்கேடானது” என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குனவர்த்தன, “எதிர்க்கட்சித் தலைவர் சபையில் எழுந்து நின்று பொய் கூறுவது வெட்கக்கேடானது. தேர்தலை குழப்புவதற்கோ ஒத்தி வைப்பதற்கோ அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை ” எனக் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் சபையில் இவ்வாறு பொய் கூற வேண்டாம். வெட்கக்கேடானது எனக் கூறினார்.
பிரதமரின் பதிலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த சஜித் பிரேமதாச, அமைச்சின் செயலாளர் அதிகாரம் கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.