உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளரான நடேசபிள்ளை வித்தியாதரனை இலங்கை தமிழரசுக்கட்சி களமிறக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
இதுதொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜாவை சமூகம் ஊடகம் தொடர்புகொண்டு கேட்டபோது.
யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் தொடர்பில் தற்போதுவரை எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் நாளை இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்திலேயே இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் காலை செலுத்தியுள்ளது.