பிரான்ஸைப் பொருத்தவரை புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும். ஆனால், பணியாளர் தட்டுப்பாடு காரணமாக பிரான்ஸும் தனது புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்கள் எளிதில் பிரான்ஸில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புலம்பெயர்தல் விதிகளை மாற்றவும் திட்டம் உள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரான Olivier Dussopt ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், புலம்பெயர்தல் தொடர்பிலான புதிய சட்ட வரைவு 2023 துவக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.