பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் மற்றும் பிக்குகள் சபையின் அழைப்பாளர்களான வசந்த முதலிகே மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் இன்று (டிசம்பர் 6) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் கல்வெவ சிறிதம்மா பிணையில் விடுவிக்கப்படுவார். எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.