தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வட அந்தமான் தீவுகளுக்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தின் நிலை விருத்தியடைந்துள்ளது.
அது குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத்தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையும் , நாளை மறுதினம் மழை நிலைமையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.