Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புதொழில்நுட்பம்நிலவின் மிக அருகில் சென்றுவிட்டு மீண்டும் பூமியை நோக்கி திரும்பும் ஓரியன் விண்கலம் - நாசா...

நிலவின் மிக அருகில் சென்றுவிட்டு மீண்டும் பூமியை நோக்கி திரும்பும் ஓரியன் விண்கலம் – நாசா அறிவிப்பு

yaraglobal

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும். இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது. இந்த திட்டம் ‘ஆர்டெமிஸ்-1’ என அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல்.எஸ். ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் படியான ‘ஆர்டெமிஸ்-1’ திட்டத்தில் நாசா வெற்றிப் பெற்றுள்ளது. ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. இதனையடுத்து டிசம்பர் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது. மீண்டும் பூமியை நோக்கி திரும்பி வருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்