Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுடயானா கமகே பிரிட்டிஷ் பிரஜை : 2004இல் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஊர்ஜிதம்: முஜிபுர் ரஹ்மான்

டயானா கமகே பிரிட்டிஷ் பிரஜை : 2004இல் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஊர்ஜிதம்: முஜிபுர் ரஹ்மான்

yaraglobal

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கை பிரஜையில்லை என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் டயனா கமகே பிரிட்டிஸ் பிரஜை அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய முஜிபூர் ரஹ்மான் எம். பி இது தொடர்பான கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் 2004 முதல் டயனா கமகே பிரிட்டிஷ் பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பிரிட்டனின் கடவுச்சீட்டை வைத்துள்ளார் எனவும்  குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2014 ஜனவரியில் டயனா கமகே என்ற இலக்கமுடைய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளார், 2018 நவம்பர் ஐந்தாம் திகதி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் எனவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பிரிட்டிஷ் பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லாததால் அவருக்கு புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். டயனா கமகேயின் விண்ணப்பங்களையும் அவர் இணைத்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்