Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புவெளிநாட்டுரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்

yaraglobal

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதன்காரணமாக அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களாக, புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர் சிரமப்படுவதாகவும் உலக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஷ்ய அரசாங்கம் இந்த செய்திகளை வதந்திகள் என்று கூறி வருகிறது.

புதினுக்கு புற்று நோய் காரணமாக கடுமையான வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தவுடன் அதிர்ச்சியில் அவருக்கு தானாகவே மலம் வெளியேறியிருப்பதாக புதினுக்கு நெருக்கமானவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். புதின் விழுந்தவுடன், மூன்று காவலர்கள் அவரைக் கையாண்டு அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்தனர். இதையடுத்து அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டன.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நடப்பதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறப்பு மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்