ஜெய்ப்பூர் : நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நேற்று ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடலாக நடைபெற்றது. படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடக்க இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியான நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக போட்டோவை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு அறிவித்தார்.
இதையடுத்து, ஹன்சிகா மோத்வானியை சோஹேல் கதுரியா சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஹன்சிகா திருமணத்திற்காக சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல சோஹேலும் தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திருமண விழாவில் முக்கியமான சடங்கான நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மகிழ்ச்சியில் ஹன்சிகா ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இவர்களின் திருமணம் நடைபெறும் போது வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஹன்சிகாவும் சோஹேலும் கணவன் மனைவியாக திருமண பந்தத்தில் இணைந்து கைகளை பிடித்தபடி இருந்தனர்.
தடபுடலாக நடந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில முக்கிய பிரபலங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களது திருமண ஒளிப்பரப்பு உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.