விமான நிலையம் வந்த அஜித் – செல்பி எடுக்க சுற்றி வளைத்த ரசிகர்கள்…

37

நடிகர் அஜித், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சினிமா படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச்சென்றார். அங்கிருந்து அவர் தனது பைக் டூரை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் முடிந்தபிறகு ஏகே62 படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

எங்கும், எப்போதும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுக்கும் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர்.

Join Our WhatsApp Group