வடகொரிய மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

0
23

வாஷிங்டன்: உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நாடு வடகொரியா. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கிம் ஜான் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சமீப காலமாக வடகொரியா பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை அதிக அளவில் பரிசோதித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த சோதனைகளை வடகொரியா முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், ஏவுகணை திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மூன்று வடகொரியா அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்