Thursday, 2 February, 2023
yaraglobal
முகப்புUncategorizedFIFA 2022- உலக கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி

FIFA 2022- உலக கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி

yaraglobal

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டீனா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 46 நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெற செய்தார்.

பின்னர் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. பின்னர் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

இரண்டாவது இடத்தை போலந்து அணி பிடித்தது. இதன்படி சி பிரிவில் இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்