6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எந்த பாடத்திலும் சித்தியடையவில்லை : அமைச்சர் சுசில்

14

சாதாரண தரப்பரீட்சையை எழுதிய மாணவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எந்த பாடத்திலும் சித்தி பெறவில்லை என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அனைவரும் தற்போது யாருடைய உரிமைகள் பற்றி பேசுகின்றனர்?. அதிபர்களின் சம்பள முரண்பாடுகள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவுகள் பற்றி பேசுகின்றனர்.

ஆனால், மாணவர்களுக்கு வகுப்புக்களில் சரியான முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றனவா என்பதை பற்றி இங்கு எவரும் பேசவில்லை. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை.
இவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார். பொறுப்புக்கூற எவரும் இல்லை. 11 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்ற பின்னர், அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றால், அது பற்றி பேச எவரும் இல்லை.

இவர்கள் யாருடைய உரிமைக்காக பேசுகின்றனர். வயது வந்தவர்களின் உரிமைகள் பற்றி பேசுகின்றனர். மறுபுறம் தமது நிலைப்பாடு ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக உள்ளது எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group