காலி மாவட்டம், பெலிஅத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ‘ரஜரட்ட ரெஜின’ கடுகதி புகையிரதம், தல்பே புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் வெளிநாட்டு பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மரணமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் இவ்வாறு மரணமடைந்த குறித்த பெண் ரஷ்ய நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மரணமடைந்த மற்றையவர் முச்சக்கர வண்டியின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
