நிந்தவூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்

10

நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சபை அமர்வில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின், குறித்த பாதீடு சபையில் அங்கீகரிக்கப்பட்டது. குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட சிறீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் பாதீட்டை வரவேற்று உரையாற்றியதுடன், நாட்டிலும், பிரதேசத்திலும் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கஷ்ட நிலமைக்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சுமை ஏற்றாத வகையில் 2023 பாதீடு அமைந்திருப்பதாகவும், சிறந்த, வரவேற்கத்தக்க பாதீட்டை சமர்ப்பித்த தவிசாளர் தாஹிரை வெகுவாகப் பாராட்டுவதாகவும் பாதீட்டு அறிக்கை மீது உரையாற்றிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இப்பாதீட்டில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி திட்டம், போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கான போசாக்கு உணவு திட்டம், வலது குறைந்தோருக்கான தொழில் முயற்சி திட்டம் போன்றவை விஷேட அம்சமாக காணப்பட்டிருந்தது அனைவராலும் வரவேற்கப்பட்டிருந்தது.

மேலும் தவிசாளர் தாஹிர் அவர்கள் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சபையின் மொத்த வருமானம் 187244220 ரூபாவாகவும், மொத்த செலவீனம் 187242220 ரூபாவாகவும் மிகை 2000 ரூபாவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாகவும் அங்கீகரித்து, பாதீடு நிறைவேறியது.

Join Our WhatsApp Group