நாளை (2) நாடு முழுவதும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (2) நாடளாவிய ரீதியில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மழையின் நிலை: மாலை அல்லது இரவு வேளையில் கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.