‘ஜெய் பீம்’ படம் 2-ம் பாகம்?

11

தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, கோலி சோடா, சென்னை 28 உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. கமல்ஹாசன் இந்தியன் 2 இரண்டாம் பாகம் படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக இருக்கிறது. இதுகுறித்து கோவா திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கூறும்போது, ”ஜெய்பீம் படம் எங்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

ஜெய்பீம் 2-ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது” என்றார். இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஜெய்பீம் படம் ஞானவேல் இயக்கத்தில் வெளியானது. இதில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். லிஜோேமால், மணிகண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.

Join Our WhatsApp Group