மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று (30) வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் : கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளை பட்டியலிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உண்மையான நண்பன் சீனா என்றும் இலங்கை அல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். கடினமான காலங்களில் இலங்கை மக்களுடன் சீனா உண்மையாக கூறினார்.
விரும்பினால், அவர்கள் கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்திருக்க வேண்டும் என்று கூறிய அவர், இதன் காரணமாக முழு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பேச்சுவார்த்தைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் கொவிட் காலப்பகுதியில் மாத்திரமன்றி, மக்களின் வாழ்வாதாரத்திற்கு சீனா, இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்கியது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்காக முதலில் உதவியை வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது அத்தோடு, சீன நிதி நிறுவனம், இலங்கை நிதி அமைச்சுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
சீனாவின் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், இலங்கைக்கு வருகைத் தந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரராக, இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு ஏனைய நாடுகளுக்கு தாம் உற்சாகத்தை வழங்கி வருகிறது.
இலங்கைக்கு கடன் வழங்கியோருடனான அனைத்து கலந்துரையாடல்களிலும் சீனா பங்குப்பற்றியுள்ளதாகவும், சீனா இலங்கைக்கு பாரியளவு கடன் வழங்கிய நாடு கிடையாது எனவும் குறித்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவிக்கையில், சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாக செயற்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது. இதனை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்கு சார்பாக செயற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள். இதனை பைத்தியகாரதனமாக பேச்சு என்று குறிப்பிட வேண்டும்.
சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மத சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள். சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரது குடும்பத்தினரது நண்பராகவே சீனா உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்தே இலங்கைக்கான சீன தூதரகம் அவரின் இந்த கருத்துக்கு பதில் வழங்கியுள்ளது.