Saturday, 28 January, 2023
yaraglobal
முகப்புஉள்நாட்டுமுட்டை விலை தொடர்பில் அறிக்கை கோருகிறது பாராளுமன்ற நிதி குழு

முட்டை விலை தொடர்பில் அறிக்கை கோருகிறது பாராளுமன்ற நிதி குழு

yaraglobal

முட்டையொன்றின் விற்பனை விலையை கணித்து ஒரு வாரத்துக்குள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
 
கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும் போது,தற்போதைய விலைக்கு அமைய முட்டை ஒன்றை விற்பனை செய்யக்கூடிய சரியான விலையை ஒரு வாரத்துக்குள் வழங்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வாவினால் நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
 
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
 
இந்தக் கூட்டத்தில் இராஜங்க அமைச்சர் (கலாநிதி) சுரேன் ராகவன், அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சந்திம வீரக்கொடி, மயந்த திசாநாயக்க, (கலாநிதி) நாலக கொடஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர். 
 

yaraglobal
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine
Google search engine

Most Popular

yaraglobal
Google search engine
yaraglobal
English English සිංහල සිංහල தமிழ் தமிழ்