Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவேலைவாய்ப்புவங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி

வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி

**இலங்கையை பிச்சை பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவிப்பு
 
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையை பிச்சை பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் எந்த வகையிலும் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையர்களாகிய நாம் சுய முயற்சியில் எழுந்து நிற்க வேண்டும் எனவும், அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய எண்ணக்கருவை  லலித் அத்துலத்முதலி கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் பட்டப்பின்படிப்பை தொடரக் கூடிய வகையில் லலித் அத்துலத்முதலியின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது- மறைந்த லலித் அதுலத்முதலி அவர்கள் ஒரு சிறந்த சட்டத்தரணியும் சிறந்த கலாநிதியும் ஆவார். நான் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட வேளை, அவரை அந்நிகழ்வுக்கு அழைத்திருந்தேன். காமினி திசாநாயக்க அவர்களையும் அந்நிகழ்வுக்காக அழைத்திருந்தேன். அச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர். ஜயவர்தனவும், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஆர்.பிரேமதாசவும் இருந்தனர்.

இவர்களுக்கிடையிலான செயற்பாடுகளுக்கும் நாட்டினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தலையெழுத்துக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். லலித், காமினி மற்றும் நான், ஐ.தே.க நவீனமயமாவதைக் காண ஆவலாக இருந்தோம். எனது குடும்பம் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வருகின்றது.

ஆனால் ஒரு நவீன ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில், சமூக ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்ட டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோர் இணைந்து தயாரித்த 1963 ஐ.தே.க மாநாட்டின் களுத்துறை விஞ்ஞாபனத்தின் வரைவு என்னைக் கவர்ந்தது. டி.எஸ்.சேனநாயக்காவின் காலத்திலிருந்தே, ஒரு கட்சி என்ற வகையில் நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கான அபிலாஷையைக் கொண்டிருந்தோம். பசியை ஒழிக்கவும், கல்வியறிவின்மையை ஒழிக்கவும், ஆரோக்கியமான மக்களை உருவாக்கவும் நாங்கள் விரும்பினோம்.

நானும் லலித்தும் ஒரே நேரத்தில் செயற்குழுவில் இணைந்தோம். எனவே, நாங்கள் அடிக்கடி பிரசாரங்களில் ஒன்றாக கலந்துகொண்டோம். 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க.வின் தலைவருமான ஜயவர்தன, முழு சமூக ஜனநாயகத்தையும் மீண்டும் மிக வலுவாக ஆரம்பித்தார்.
லலித், காமினி ஆகியோரிடம் இதைப் பற்றி கலந்துரையாடும் போது நான் நிறைய ஆய்வுகளைச் செய்தேன் என்பதையும் குறிப்பிட வேண்டும். நான் லிபரல் சமூகம் அல்லது லிபரல் நிலையம் என்று அழைக்கப்படும் மற்றொரு கல்வி முகாமைச் சேர்ந்தவன்.

நாட்டின் மிக முக்கிய பகுதியான வர்த்தகம் லலிதிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கடற்படை விவகாரங்கள் அதில் சேர்க்கப்பட்டன. ஜனாதிபதி மற்றைய பிரதான செயற்திட்டத்தை தன்னிடமே வைத்துக்கொண்டு பெரிய கொழும்பு பொருளாதார வலயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தார். அதற்காக மகாவலி வேலைத்திட்டம் காமினி திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. லலித்தின் கடமை வர்த்தகமாக இருந்தது. அப்படித்தான் ஆரம்பித்தோம்.

அவர் வர்த்தகத்தை திறந்தார். அப்போது நாங்கள் சோசலிச பொருளாதாரமாக இருந்தோம். அரசாங்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தியது. ஜனாதிபதி ஜயவர்த்தன என்ன செய்தார்? கம்பஹா மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இது நீர்கொழும்பில் தொடங்கி பியகமவில் முடிவடைகிறது. அங்கு கட்டுநாயக்க மற்றும் பியகம ஆகிய இரண்டு முதலீட்டு வலயங்களிலும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் பொதுவான விதிகள், செயன்முறைகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதுடன் நடைமுறையும் செய்யப்பட்டன.

ஆனால் அந்தப் பகுதிகளில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்ய முடியாது என்பதை லலித் புரிந்து கொண்டார். நாட்டின் மற்ற பகுதிகளையும் நாங்கள் வைத்திருக்க வேண்டும். எனவே, பொருளாதார வலயத்திற்கு வெளியே ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை லலித் ஆரம்பித்தார். போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் அவசியம் தொடர்பில் அவர் அடையாளம் காட்டியிருந்தமை மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

இலங்கையின் முக்கிய துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தை அவர் அபிவிருத்தி செய்தார். கொழும்பைச் சுற்றியுள்ள அபிவிருத்தி, இரண்டு பெரிய பகுதிகளாக தொடர்கிறது. ஒருபுறம் வர்த்தக மையமாகவும் மறுபுறம் கொழும்புடன் இணைந்த துறைமுகம், பெரிய பொருளாதார வலயமென இந்த அபிவிருத்தி விஸ்தரிக்கப்பட்டதுடன் அவை பின்னர் கிராமப்புறங்களையும் சென்றடைந்தது.
நான் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய போதுதான் பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு புலமைப்பரிசில் திட்டமாக மஹபொல வழங்கும் யோசனையை லலித் கொண்டு வந்தார். அதனால் உங்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் கிடைத்துள்ளது. நாம் நிறுவனங்களுக்காக அன்றி, இலவசக் கல்விக்காக தனிநபர்களுக்கு நிதியளித்தது இதுவே முதல் முறையாகும்.

துரதிஷ்டவசமாக, எம்மால் அதை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. முழு பொறிமுறையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய பாடநெறிகள் தொழில் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக  பல்கலைக்கழகங்கள், அவர்களின் வெளிவாரி பாடநெறிகளை நடத்துகிறது. 05 இலட்சம் பேர் மேலதிகமாக உள்ள அரச பணியில், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக சுமார் 10,000 பேரை பணியமர்த்த வேண்டியுள்ளது.
எவ்வாறேனும், மஹபொல

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments