Sunday, 27 November, 2022
yaraglobal
Homeசினிமாநடிகர் கமலஹாசன் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் கமலஹாசன் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் கமல்ஹாசனுக்கு, நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்..

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து  ஈடுபடுகிறார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தைச் சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று பகல் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வைத்தியர்கள் ஓய்வு எடுக்க கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தரப்பினர் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments