Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுதனுஷ்கோடியில் தஞ்சம் : 10 இலங்கையர்களும் மண்டபம் முகாமில் தங்க வைப்பு

தனுஷ்கோடியில் தஞ்சம் : 10 இலங்கையர்களும் மண்டபம் முகாமில் தங்க வைப்பு

திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வவுனியா‌ மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவா்கள் உள்பட 10 போ் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு புதன்கிழமை வந்தனா். அவர்களை அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடா்ந்து நீடித்து வருவதால், அங்கு உணவுப் பொருள்கள் விலை பல மடங்கு உயா்ந்தது. இதனால், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள் படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு வருவது அதிகரித்துள்ளது.இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், வாழ்வாதாரம் தேடி கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தமிழர்கள் 199 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை வவுனியா கணேசபுரத்தைச் சோ்ந்த உதயசூரியன் (47), இவரது மனைவி பரிமளாதேவி (44), மகன்கள் திமோத் (23), டிலக்ஷன் (17), ஜோயா் (12), உறவினா் ரீகன் (17), வவுனியா பூவரசன்குளத்தைச் சோ்ந்த புவனேஷ்வரி (44), விபூசன் (10), சதுா்ஷா (4), யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த நியான்சன் (20) ஆகிய 10 போ் ரூ. ஒரு லட்சம் கொடுத்து படகு மூலம் தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் புதன்கிழமை காலை வந்து இறங்கினா்.

தகவலறிந்து அங்கு சென்ற கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் அகதிகளாக வந்தவா்களை மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் சென்று தனித் துணை ஆட்சியரிடம் ஒப்படைத்தனா். அவா்களுக்கு தனித் தனி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விசாரணைக்குப் பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு இதுவரை வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments