Sunday, 27 November, 2022
yaraglobal
Homeதொழில்நுட்பம்Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!

Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!

நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!! ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். இந்த வகையில் ஒரு கனெக்‌ஷன் மூலம் பலர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில சமயம், கணக்கின் பாஸ்வர்ட் நண்பர்களிடம் மட்டுமல்லாமல், நண்பர்களின் நண்பர்கள் வரை கூட செல்வதுண்டு. ஒரு முறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால், சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை மாற்றும் வரை, பிறர் தங்களுக்கான சந்தாவை பெறுவது பற்றி யோசிப்பது கூட கிடையாது. 

ஆனால், இனி இப்படி செய்ய முடியாமல் போகலாம். நெட்பிளிக்ஸ் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், சந்தா கட்டிய நபர், தான் கணக்கை பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களின் பெயர்களை தனது கணக்கிலிருந்து அகற்றும் வசதி அளிக்கப்படுகின்றது. 

நெட்பிளிக்ஸ்: புதிய அம்சத்தின் விவரம் என்ன? 

மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமான மக்கள் நெட்ஃபிளிக்ஸை இலவசமாக இயக்குகிறார்கள் என்று நெட்ஃபிக்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ, பலர் இலவசமாக நெட்பிளிக்சின் நன்மையை அனுபவித்து வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், ஒரே கிளிக்கில் மற்ற பயன்படுத்துவதும் உங்கள் கணக்கில் இருந்து நீக்கும் வசதியை நெட்ஃபிக்ஸ் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகை மூலம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Netflix இன் அக்கவுண்ட் செட்டிங் (Account Setting ) ஆப்ஷனில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள், தங்கள் கணக்கு எந்தெந்த சாதனங்களில் லாக் இன் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இதற்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவர் விரும்பினால், அவர் கணக்கைப் பகிர விரும்பாத சாதனங்களை அகற்றி விடலாம். 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments