Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசுற்றுலாவை மேற்கொள்வதற்கு உகந்த முதற்தர நாடு இலங்கை: ஆசிய ஊடக, கலாசார சங்கம்

சுற்றுலாவை மேற்கொள்வதற்கு உகந்த முதற்தர நாடு இலங்கை: ஆசிய ஊடக, கலாசார சங்கம்

தற்போது நிலவுகின்ற நிலைமைகளின் அடிப்படையில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு உகந்த முதற்தர நாடு இலங்கையாகும் என ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கத்தினர் உறுதி. ஊடகங்களில் காட்டப்படும் அளவிற்கு பாதகமானதொரு சூழ்நிலை இலங்கையில் காணப்படவில்லையென ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கமானது பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தபோது தெரிவித்தது.

2022.11.03ஆம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்த ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கத்தின், இந்தியாவினதும் நேபாளத்தினதும் ஊடகப் பிரதிநிதிகள் குழுவினர், இலங்கையின் சுற்றுலாத் துறையை மிகத் துரிதமாக மீட்டெடுப்பதற்கு தமது ஊடகங்கள் ஊடாக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து குறுகிய காலத்திற்குள் மிகத் துரிதமாக பழைய நிலைமைக்குத் திரும்புவதற்கு அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய மற்றும் நேபாள ஊடகப் பிரதிநிதிகள் பிரதமருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களது பற்றாக்குறையிலிருந்து மீள்வதற்கும் பொருட்கள் மற்றும் நிதிசார் ரீதியில் மீள்கட்டமைக்கும் வசதிகளை உடனடியாக இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் பிரதமர் தினேஷ் குணவர்தன, இதன்போது இந்தியாவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தற்போது எழுந்துள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு அரசு முன்னின்று தீர்வுகளை வழங்கிவருவதாகவும் பல வருடங்கள் பழமைவாய்ந்த இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தற்போதைய, அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்திய மற்றும் நேபாள ஊடகப் பிரதிநிதிகள் கூறும்போது, மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு வர வேண்டாம் என்று சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற பிரச்சாரங்கள் தொடர்பில் உற்றுநோக்கும்; போது, முற்றுமுழுதாக எந்தவொரு பிரச்சினையுமின்றி நாட்டின் எப்பகுதிக்கும் சென்றுவரக்கூடிய நிலைமைகள் காணப்படுவது தொடர்பில் தாம் ஆச்சரியமடைந்ததாகக் குறிப்பிட்டனர்.

இலங்கை தொடர்பான பிழையான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டமையை நீக்குதல் மற்றும் இலங்கையை மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு உலகிலுள்ள அனைவரையும் அறிவுறுத்த வேண்டியது தமது முக்கிய பணி என்றும் குறிப்பிட்டனர்.

இந்தத் தூதுக் குழுவில் ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கத்தின் சார்பில் கல்யாண் குமார், சத்திய நாராயணன், சம்ஜானா புதால், அன்புஜ் மகேஸ்வரி மற்றும் அந்தச் சங்கத்தின் இலங்கைக்கான உத்தியோகத்தர் குழாமிலுள்ள உபுல் ஜயசிங்க, பெதும் விக்கிரமரத்ன, இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவர் தம்மிகா விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments