Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமட்டு. பொலிஸ் நிலைய சிறை கூண்டில் தலையை சுவரில் மோதி உடைத்த சந்தேக நபர்

மட்டு. பொலிஸ் நிலைய சிறை கூண்டில் தலையை சுவரில் மோதி உடைத்த சந்தேக நபர்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் அடைக்கப்பட்ட ஒருவர் தனது தலையை கூண்டிலுள்ள சுவருடன் மோதி உடைத்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான  நேற்று புதன்கிழமை பகல் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் கருவப்பங்கேணியிலுள்ள வீட்டை முற்றுகையிட்டு அங்கு 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 21 கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலைய கூண்டில் அடைத்து வைத்து விசாணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.இந்த நிலையில் குறித்த கஞ்சா வியாபாரி அடைக்கப்பட்ட கூண்டில் உள்ள சுவருடடன் தனது தலையை மோதி உடைத்துள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

இதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய கூண்டில் தடயங்களை பெறுவதற்காக  தடயவியல் பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments