Sunday, 27 November, 2022
yaraglobal
Homeவிளையாட்டுடி20 உலக கோப்பை: தென்னாபிரிக்காவு டனான போட்டி-பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்களால் வெற்றி

டி20 உலக கோப்பை: தென்னாபிரிக்காவு டனான போட்டி-பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்களால் வெற்றி

 
T20 உலகக்கிண்ண தொடரில் இன்று தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி, 33 ஓட்டங்கள  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களைப்  பெற்றது. அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ஓட்டங்களையும், இஃப்திகார் அகமது 51 ஓட்டங்களையும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 69 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென்னாபிரிக்கா 15 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி பயணித்த தென்னாபிரிக்கா, 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி, 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அணிதலைவர் டெம்பா பவுமா 36 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்2 புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது. அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments