Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகடந்த 24 மணி நேரத்தில் நுரைச்சோலையில் அதிகூடிய மழை வீழ்ச்சி

கடந்த 24 மணி நேரத்தில் நுரைச்சோலையில் அதிகூடிய மழை வீழ்ச்சி

(கனகராசா சரவணன் )

இலங்கையில் இன்று வியாழக்கிழமை (03)  காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும், மட்டக்களப்பில் 9.1 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

அதே நேரம்,6 ம் திகதிவரை மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ தெரிவித்தார். 

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ்  வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

வடக்கு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்க கூடியதாகவுள்ளது வடக்கு வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி லீற்றருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments