Sunday, 27 November, 2022
yaraglobal
Homeகட்டுரைஅரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நடத்திய போராட்டம் பிசுபிசுப்பு (சிறப்பு கட்டுரை)

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நடத்திய போராட்டம் பிசுபிசுப்பு (சிறப்பு கட்டுரை)

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பொது அமைப்புகளும் சேர்ந்து நடத்திய போராட்டம் இலக்கை எட்டவில்லை என்றே அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.
12க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் 25க்கும் மேற்பட்ட பொது அமைப்புகளும் சேர்ந்து இன்று நண்பகல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மருதானை எல்பின்ஸ்டன் சந்தியில் இருந்து, கொழும்பு கோட்டை வரை ஆர்ப்பாட்டப் பேரணி நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தார்கள்.

திட்டமிட்டபடி பிற்பகல் 3 மணி அளவில் மருதானை சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கல்லூரி சந்தியில் போலீஸ் சார் தடையை ஏற்படுத்தி, போராட்டக்காரர்களை வழிமறித்தனர்.
ஆயிரக்கணக்கான போலீசாரும் இ ராணுவத்தினரும் கடற்படை, விமானப்படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில், தடைகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்களால் முன்னே செல்ல முடியாத அளவுக்கு படை குவிப்பு செய்யப்பட்டிருந்தது.

குண்டாந்தடி தாங்கிய போலீசாரும், கண்ணீர் புகை பிரயோகம் செய்வதற்கு தயாராக இருந்த போலீசாரும், நீர்த்தாரை அடிப்பதற்கு தயாராக இருந்த கனரக வாகனங்களும், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேற முடியாமல் தடுமாறியதை காண முடிந்தது. ஆர்ப்பாட்டப் பேரணியில் வந்த ஹிருனிக்கா பிரேமிச்சந்திர உட்பட அரசியல் பிரமுகர்கள் பொலிசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பொழுதிலும், அவர்கள் எத்தகைய அசைவுகளையும் காட்டாது அசையாமல் நின்றதையே காண முடிந்தது. இறுதியில், அந்த இடத்திலேயே போராட்டம் நிறைவு பெறுவதாக அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள்.

ஜனநாயக ரீதியான போராட்டம் ஒன்றுக்கு, போலீசார் ஜனநாயக ரீதியாகவே பதிலளித்திருப்பது வரவேற்கக் கூடிய அரசியல் நிகழ்வாகவே பார்க்க முடிகின்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மருதானை சந்தையில் இருந்து, கோட்டை ரயில் நிலையம் வரை ஏற்பாடு செய்திருந்தது முன்கூட்டியே போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸார் இதற்கு அனுமதி மறுக்கவில்லை. என்றாலும், பாதுகாப்புக்கும் புறக்கோட்டையை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற மொத்த வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என போலீசார் அறிவித்ததோடு, ஏற்பாட்டாளர்களுக்கு அதனை எழுத்து மூலமாக அறிவித்து, புறக்கோட்டைக்குள் நுழைய வேண்டாம் என்று தெரிவித்தனர்..
பொலிசார் இன்று காலை முதலே முன்னறிவிப்பு வழங்கிய நிலையில், ஆர்ப்பாட்டப் பேரணியை மருதானை தொழில் நுட்பக் கல்லூரி சந்தியில் மறித்தனர்.

போலீசார் எந்த வகையிலும் தங்களது வழிமறிப்பிலிருந்து பின் வாங்காத நிலையில், போராட்டக்காரர்கள் இலக்கை அடைய முடியாமல் கலைந்து சென்றனர் என்பதே இன்றைய போராட்டத்தின் முடிவாக இருக்கின்றது.

போராட்டத்தின் முடிவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் இந்த அளவில் முடித்துக் கொள்கின்றோம். இன்று இது ஒரு ஆரம்பம். அடுத்த கட்டம் இதைவிட பாரியதாக இருக்கும். அரசுடன் மோத வந்த நாங்கள். படைவீரர்களுடன் மோதுவதற்கு தயாராக இல்லை. ஆகவே,இந்த அளவில் நாம் கலைந்து செல்கின்றோம், அடுத்த கட்டத்தில் சந்திப்போம் என கூறினார்.

ஜனாதிபதி ரணிலை பதவியிலிருந்து துரத்தும் வரை போராட்டம் தொடரும் என ஹிருணிக்கா பிரேமசந்திர தனது ஆவேச கருத்தை தெரிவித்தார்.
குணா – Ceylonsri

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments