Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதேசிய அடையாள அட்டை : திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமுல்

தேசிய அடையாள அட்டை : திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமுல்

** திருத்தங்களை மேற்கொள்ள 500 ரூபாய்

** நகல் வழங்குவதற்கு 1000 ரூபாய்

** ஒரு நாள் சேவை -2000 ரூபாய்

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திருத்தப்பட்ட கட்டண முறை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையின் நகலை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு முதல் தடவையாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும், ஒரு நாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 2000 ரூபாவும் அறவிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments