450 கிராம் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதே நேரம், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இது அமுல்படுத்தப்படும் என்று உரிமையாளர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.