2ம் திகதி மக்கள் போராட்டம் : சட்டத்தரணிகள் சங்கங்கள் முழு ஆதரவு

24

நாளை மறுதினம் 2ம் திகதி நடைபெறும் மக்கள் போராட்டத்துக்கு , தமது ஆதரவையும் வழங்கப் போவதாக இளம் சட்டத்தரணி சங்கமும், சட்டத்தரணிகள் சங்கமும் அறிவித்துள்ளன. இன்று கொழும்பு ஆசிரியர் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் நவம்பர் 02 மருதனை எல். பின்ஷ்டன் முன்பாக திரளுமாறு அழைப்பு விடுகின்றோம். நாட்டில் பசி பட்டினி வறுமை தலைவிரித்து ஆடுகிறது.பொலிஸார் ராஜபக்க்ஷே குடும்பத்தாருக்கு ஊழியம் செய்கிறார்கள். பொலிஸ் அராஜகம் மேல் ஓங்கி செல்கிறது. ரணில் ஆட்சிக்கு வந்து நாட்டு மக்களையும் நாட்டையும் பற்றி கவலைப்படாமல் கோட்டாவை எப்படிக் காப்பாற்றலாம், மகிந்தவுக்கு எப்படி மறுவாழ்வு கொடுக்கலாம்,வசந்த முதலிகே, ஸ்ரீறிதம்ப தேரர் போன்றோரை எவ்வாறு அடக்கலாம் சிறையில் வைக்கலாம் என்ற சிந்தனையில் மட்டும் மூழ்கியிருக்கிறார்.
மக்களின் பசியை எவ்வாறு போக்கலாம் என்ற சிந்தனை சிறு துளி கூட இல்லை. ரணில் அவர்களே நீங்கள் நினைப்பதை மட்டும் செய்ய நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. நடக்க விட மாட்டோம் என்று கூறினர்.

Join Our WhatsApp Group