வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட குழு

13

வட மாகாணத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதென அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணம் கச்சேரியில் இன்று நடந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது. இது எவ்வாறு வடக்குள் கொண்டு வரப்படுகின்றன என்பதை கண்டறிவதற்கும், மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் செயல் திட்டங்களை வகுப்பதற்கு இந்த குழு முடிந்த நடவடிக்கைகளை எடுக்கும். ” எந்த வகையிலும் நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டு வருவதற்கும் இளம் சமூகத்தினர் அதனை பயன்படுத்துவதற்கும் நாம் அனுமதிக்கப் போவதில்லை. ஆகவே, இதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்குரிய துரித நடவடிக்கைகளை நாம் எடுப்போம். “என அவர் கூறினார். இந்தக் குழுவில் யார் யார் அங்கம் வகிக்கின்றார்கள் என்ற விவரங்களை அமைச்சர் கூறவில்லை.

Join Our WhatsApp Group