யாழ்ப்பாணத்தில் சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் அமைச்சர் விஜயதச அதிதி

29

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார். நேற்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்விலேயே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன்,வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய,யாழ் மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபர் ஈ.எம்.யு.யு.குணரத்ன, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உயித் லியனகே,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  த.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Join Our WhatsApp Group