தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞனின் சடலத்தை கொண்டுவர அமைச்சு ஏற்பாடு

44

தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத் என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தென்கொரியாவில் சியோலின் இடாவோன் மாவட்டத்தில் ஹாலோவீன் சன நெரிசலில் சிக்குண்டு 19 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 153 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் காயமடைந்துள்ளனர். (நன்றி- உதயம்)

Join Our WhatsApp Group