- கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே பலி
தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.